பாறையை வெடி வைத்து தகர்க்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - அவினாசியில் பரபரப்பு
அவினாசியில் பாறையை வெடி வைத்து தகர்க்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
அவினாசி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அவினாசி பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து கொண்டே வருவதால் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது.
எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவினாசி வ.உ.சி. பூங்கா, வாரச்சந்தை, சீனிவாசபுரம், காமராஜ் நகர், சூளை மற்றும் ராயம்பாளையம் பகுதிகளில் புதிதாக மேல்நிலைத்தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிகளுக்கு சிறுமுகை பவானி ஆற்றில் இருந்து குடிநீரை கொண்டு வந்து தொட்டிகளில் நிரப்புவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.53 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வ.உ.சி. பூங்காவில் தொட்டிகட்டும் பணிக்காக குழி தோண்டியபோது அங்கு அதிக அளவில் பாறை இருந்தது. எனவே அந்த பாறையை தகர்த்து எடுப்பதற்காக வெடிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இங்கு குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் வெடி வைத்தால் வீடுகளுக்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வெடி வைக்கக்கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது “ பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாமல் சிறிய அளவில் தான் வெடி வைக்கப்படும் வெடி வைத்து தகர்த்து தான் பாறையை எடுக்க முடியும்” என்றனர். அதை அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்து வெடி வைக்கக் கூடாது என்று வாதிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில் நாங்கள் மேலதிகாரிகளிடம் இது பற்றி எடுத்துச் சொல்லி தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story