5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தொடர் முழக்க போராட்டம்


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 30 April 2019 10:45 PM GMT (Updated: 30 April 2019 8:24 PM GMT)

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கோட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், ஜேம்ஸ், மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தொடக்க உரையாற்றினார்.

கோட்ட செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், சின்னத்துரை ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினர். மாநில துணைத்தலைவர்கள் கணேசன், ரவி, முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும், சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் கோட்ட செயலாளர்கள் லோகநாதன், திருநாவுக்கரசு, மோகன்தாஸ், ராமர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Next Story