பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2019 10:30 PM GMT (Updated: 30 April 2019 10:24 PM GMT)

பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பொள்ளாச்சி,

மோட்டார் வாகன விபத்து சட்டப்படி விபத்து வழக்குகள் தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெறும். இந்த நிலையில் விபத்து வழக்குகளை சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காண புதிய சட்டம் நடை முறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டால் வக்கீல்கள் மற்றும் இழப்பீடு கேட்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பழைய நடைமுறையை பின்பற்ற கோரி பொள்ளாச்சி கோர்ட்டு முன் தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க துணை தலைவர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். இதில் வக்கீல் சங்க கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் மூர்த்தி, பொள்ளாச்சி வக்கீல் சங்க துணை செயலாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர் மீரான் மொய்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இது குறித்து வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது:–

நீதிமன்றத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், தனியார் விபத்து காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பேசி தீர்த்து கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் கோர்ட்டுக்கு வர முடியாத நிலைமையை புதிய சட்டங்கள் மூலம் ஏற்படுத்தும்போது வழக்காடிகளின் உரிமை மற்றும் வக்கீல்களின் தொழில் பாதிக்கும். ஏற்கனவே பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் அதிகாரம் கோர்ட்டுக்கு இருந்ததை பிரித்து சப்–கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோர்ட்டு மூலம் 2 மாதங்களில் பெற பெறக்கூடிய அந்த ஆவணங்களை சப் –கலெக்டர் அலுவலகத்தில் பெறுவதற்கு 2 ஆண்டுகளாகியும் பெற முடியாத நிலை உள்ளது. இதைப் போன்று வாடகை கட்டுப்பாடு சட்டம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தையும் பறித்து சப்–கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாசில்தாராக இருந்து பதவி உயர்வு பெற்று சப் –கலெக்டராக வருவோருக்கு சட்டத்தை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும் நீதிமன்றங்களின் உரிமை பறிக்கப்படுகிறது. ஏற்கனவே லோக் – அதாலத்தில் வழக்காடிகள், வக்கீல்களை வற்புறுத்தி சமரச முறை யில் ஒப்படைப்பதால் வக்கீல் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகாரங்களை விட்டு கொடுப்பதால் நீதிமன்றத்தின் கட்டுப்பாடு சிதைக் கப்படுகிறது. எனவே பழைய முறைப்படி கோர்ட்டுக்கு அனைத்து அதிகாரங்களை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story