மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + "||" + Seized 500 kg of plastic products which are prohibited in Thiruvannamalai

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை,

தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்பட குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.


இது குறித்த புகாரின்பேரில் நேற்று திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் அலுவலர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனையொட்டி அவர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையம், எல்.ஜி.எஸ். நகர், போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்று சோதனை நடத்தினர்.

இதில் சுமார் 500 கிலோவிற்கு மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் 100 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சிைய கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
2. திருவண்ணாமலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருவண்ணாமலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 89 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர்.
3. திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
4. திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திய 3 பேர் கைது
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கூச்சல்-குழப்பம், வாக்குவாதம்: குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு - வாயில் கருவாட்டை கவ்வி நூதன போராட்டம்
திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...