வானவில் : நீரிலும், நிலத்திலும் செல்லும் ‘வேளொக்ஸ்’
நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்களை பற்றி அறிந்திருப்போம்
நீரிலும், நிலத்திலும் இயங்கும் ரோபோவை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வேளொக்ஸ் என்னும் இந்த ரோபோ பார்ப்பதற்கு திருக்கை மீன் மற்றும் கம்பிளி பூச்சி ஆகிய இரண்டின் வடிவங்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது போல இருக்கிறது. நீரில் நீந்துவதற்கு இருபுறமும் துடுப்புகள் இருக்கின்றன.
எல்லா வகையான நிலப்பரப்பிலும் இந்த ரோபோ நடக்கும். ஐஸ் கட்டிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. கற்கள், பாறைகள் போன்ற கடினமான தளங்களிலும் கூட சிரமமின்றி நகர்ந்து செல்லும். வெகு விரைவாக நிலத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொள்கிறது இந்த வேளொக்ஸ். இந்த ரோபோவைக் கொண்டு வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் திட்டம் இருக்கிறது. பனிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் இவைகளை ஈடுபடுத்தும் யோசனையும் இருப்பதாக கூறுகின்றனர். வளைந்து கொடுக்கும் ஆற்றல் இருப்பதால் பல வகையிலும் இந்த ரோபோவை பயன்படுத்த முடியும்.
Related Tags :
Next Story