வானவில் : டிவைடரில் விரைந்து செல்லும் ‘மீடியன் எ.எம்.பி’ ஆம்புலன்ஸ்
நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் போது மீட்புப்பணி வாகனங்களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் அவ்விடத்திற்கு வந்து சேர்வதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும்.
சரியான நேரத்திற்கு வந்து சேர இயலாமல் போனால் விபத்து ஏற்பட்ட நபரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும். கொரியாவை சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளனர்.
மீடியன் AMB என்று பெயர் கொண்ட இந்த ஆம்புலன்ஸ் ஒரு மோனோ ரெயில் போன்று வேலை செய்கிறது. அதாவது, சாலையை பயன்படுத்தாமல் நடுவில் இருக்கும் டிவைடர் தடுப்பில் ஏறி சரசரவென்று சரியான நேரத்திற்கு வந்து விடும். போக்குவரத்து நெரிசலுக்குள் நுழைந்து வருவதற்கு பதிலாக மக்களை எந்த வகையிலும் தொல்லை செய்யாமல் இது நடுவில் நுழைந்து வந்து விடுகிறது.
இருபுறமும் திறக்கும் கதவுகள், ஒரு ஓட்டுநர், ஒரு உதவியாளர் மற்றும் ஸ்ட்ரெச்சர் ஆகியவையுடன் சகல வசதிகளை கொண்டுள்ளது இந்த ஆம்புலன்ஸ். உயிரின் அருமையை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பிற்காக கொரிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இம்முறை பல நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Related Tags :
Next Story