வானவில் : 48 மெகா பிக்ஸெல் கேமரா மெய்ஸு


வானவில் : 48 மெகா பிக்ஸெல் கேமரா மெய்ஸு
x
தினத்தந்தி 1 May 2019 12:41 PM IST (Updated: 1 May 2019 12:41 PM IST)
t-max-icont-min-icon

சீனாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சமீபத்திய வரவுதான் மெய்ஸு ஸ்மார்ட்போன்.

தற்போது வந்துள்ள ஸ்மார்ட்போன்களிலேயே அதிக பிக்ஸெல் உள்ள கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும். இதில் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் பின்பகுதியில் 2 கேமராக்கள் உள்ளன. பிங்கர் பிரிண்ட் ஸ்கானர் தொடு திரையிலேயே உள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம் என மூன்று வண்ணங்களில் இது வெளி வந்துள்ளது.

6.2 அங்குல தொடு திரையைக் கொண்ட இது 855 ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. மேலும் நீண்ட நேரம்செயல்பட வசதியாக இதில் 3,600 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை ரூ.35,200 ஆகும். இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை ரூ.38,300 ஆகும். இதில் உயர் மாடல் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை ரூ.43,500 ஆகும். இதில் அமோலெட் டிஸ்பிளே இருப்பதால் படங்கள் மிக துல்லியமாக தெரியும். இதன் முன்பக்கத்தில் 20 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இது செல்பி பிரியர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும்.

இது பேஸ் ரெகக்னிஷனுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் எடை 165 கிராம் ஆகும். பார்ப்பதற்கு அழகிய தோற்றம், மிகச் சிறப்பான செயல்பாடு, அதிக பிக்ஸெல் கொண்ட கேமரா ஆகியவற்றுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Next Story