மஞ்சூர் அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி சாவு - வனத்துறையினர் விசாரணை


மஞ்சூர் அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி சாவு - வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2019 4:15 AM IST (Updated: 1 May 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே கோட்டக்கல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின் படி உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், குந்தா வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதியில் சுருக்கு கம்பி வைக்கப்பட்டிருந்ததும் அதில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுத்தைப்புலியின் உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் நந்தினி, ஸ்ரீநிதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இறந்து கிடந்தது 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைப்புலி என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story