சரக்கு வேன் மீது பஸ் மோதல்; ஒருவர் சாவு 2 மாடுகள் செத்தன
வி.களத்தூர் கைகாட்டி அருகே பஸ் சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சரக்கு வேனில் இருந்த 2 மாடுகள் உயிரிழந்தன.
மங்களமேடு,
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் தனபால்(வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். வி.களத்தூர் கைகாட்டி அருகே பஸ் சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சரக்கு வேனில் இருந்த 2 மாடுகள் உயிரிழந்தன. மேலும் வேன் டிரைவர் கெங்கவல்லியை சேர்ந்த சேகர்(40), பஸ்சில் பணம் செய்த தேனியை சேர்ந்த செல்லபாண்டி(45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story