மாவட்ட செய்திகள்

மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் + "||" + Awareness procession on May Day

மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
மே தினத்தையொட்டி தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று குளித்தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
குளித்தலை,

மே தினத்தையொட்டி தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று குளித்தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். குளித்தலை பெரியார்நகர் பகுதியில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜானகிராமன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
2. பெரம்பலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூரில் நடைபெற்ற ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தி‌ஷாமித்தல் தொடங்கி வைத்தார்.
3. சூரத் தீ விபத்து எதிரொலி: நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம்
சூரத் தீ விபத்து எதிரொலியாக நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
4. திருவாரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
5. குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நாகையில் நடந்தது
நாகையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.