வேலூரில், தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு கண்டறியும் ஒத்திகை - 4 மணி நேரம் நடந்தது
வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாயுடன் 4 மணி நேரம் வெடிகுண்டை கண்டறியும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
வேலூர்,
இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளை கண்காணிக்கவும், சோதனை நடத்தவும் போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட் டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மற்றும் விடுதிகள், மருத் துவமனைகளில் சோதனை நடந்தது. வேலூர்-ஆற்காடு சாலையில் தனியார் மருத் துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக வெளிநாடுகள், வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் வருகின்றனர். நோயாளிகள் போர்வையில் மருத் துவமனைக்கு தீவிரவாதிகள் வந்து நாச வேலையில் ஈடுபட் டாலோ அல்லது மருத் துவமனை வளாகத்தில் வெடிகுண்டுகள் வைத்தாலோ அதனை எதிர்கொள்வது மற்றும் வெடிகுண்டை கண் டறியும் ஒத்திகை நேற்று மதியம் நடந்தது.
வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் 6 வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை கண்டறியும் போலீசாரின் மோப்பநாய் அக்னியுடன் 10-க்கும் மேற்பட்டோர் வெடிகுண்டு கண்டறியும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு, குழந்தைகள் சிறப்புப்பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி, பிரசவ வார்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த ஒத்திகை மேற்கொள் ளப்பட்டது. நோயாளிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மதியம் 12 மணிக்கு தொடங்கிய ஒத்திகை மாலை 4 மணியளவில் முடிந்தது. இந்த ஒத்திகையால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலா ளிகளிடம் எந்த நேரமும் விழிப்புடனும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும், சந்தேகப் படும் படியான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
வேலூரில் உள்ள விடுதிகளில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட போலீசார் சென்று அங்கு தங்கி உள்ளவர்களில் விவரங்களை கேட்டறிந்தனர். முறையான ஆவணங்களை காண்பித்து அவர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் விசாரித்தனர். உரிய ஆவ ணங்கள் இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண் டாம் என கூறினர். மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது அறை வாடகைக்கு கேட்டு வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story