திண்டுக்கல் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: கசிவு நீரை பிடிக்க காத்திருக்கும் மக்கள்
திண்டுக்கல் பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக குழாய் வால்வில் கசியும் நீரை பல மணி நேரம் காத்திருந்து குடங்களில் பிடித்துச்செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்,
கோடை காலம் தொடங்கினாலே திண்டுக்கல் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடும். இதனை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பலனாக நகர் பகுதிகளில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் புறநகர் பகுதிகளின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. புறநகர் பகுதிகளில் தற்போது 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது என்ற புகார் புறநகர் பகுதிகளில் பரவலாக உள்ளது. மேலும் இவ்வாறு வழங் கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை என்ற புகாரும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி நந்தனார்புரம் பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் சில மணி நேரமே வினியோகம் செய்யப்படுவதால் எங்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். சில நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயின் வால்வு பகுதியில் தண்ணீர் கசியும். அதனை பல மணி நேரம் காத்திருந்து குடங்களில் பிடித்து செல்வோம். எனவே புறநகர் பகுதியில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story