தஞ்சையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 540 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


தஞ்சையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 540 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 7:36 PM GMT)

தஞ்சையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் 540 பேர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இருப்பிட பயிற்சி முகாம் மற்றும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இருப்பிட பயிற்சி முகாம் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் கைப்பந்து, ஆக்கி, கூடைப்பந்து பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வல்லுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்த பயிற்சி முகாமில் ஏற்கனவே தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், ஆர்.டி.எஸ். விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

முகாமில் பங்கேற்றுள்ள 180 மாணவ, மாணவிகளுக்கும் இருப்பிட வசதி, சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்றுள்ளவர்களுக்கு சீருடை, சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

கோடைகால பயிற்சி முகாம் நேற்று தொடங்கப்பட்டு வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் அனைத்து விளையாட்டுக்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 540 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story