நெல்லை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


நெல்லை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 2 May 2019 10:15 PM GMT (Updated: 2 May 2019 8:09 PM GMT)

நெல்லை அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் நசுங்கி பலியானார்.

நெல்லை, 

கன்னியாகுமரி மாவட்டம் மிளகுமூடு குழிக்கோட்டை சேர்ந்த மணி என்பவருடைய மகன் கனிஷ்குமார் (வயது 35). லாரி டிரைவர். பள்ளியாடியை சேர்ந்த தங்கப்பன் மகன் சசி (44). லாரி கிளனர். இவர்கள் 2 பேரும் லாரியில் அவ்வப்போது நாமக்கலுக்கு சென்று கறிக்கோழியை ஏற்றி வருவது வழக்கம்.

அதே போல் நேற்று காலை லாரியில் 2 பேரும் நாமக்கல் நோக்கி புறப்பட்டனர். இந்த லாரி நெல்லையை கடந்து 4 வழிச்சாலையில் கங்கைகொண்டான் போலீஸ் சோதனை சாவடி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்தது. அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி உருண்டு கவிழ்ந்தது.

இதில் டிரைவர் கனிஷ்குமார் லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சசி பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்ட சோதனைச்சாவடி போலீசார் விரைந்து சென்று சசியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கனிஷ்குமார் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையொட்டி 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story