காலி பணியிடங்களை நிரப்ப கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காலி பணியிடங்களை நிரப்ப கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 May 2019 10:45 PM GMT (Updated: 2 May 2019 8:41 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

பணியிடம் மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ள ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு இடம் மாற்றம் வழங்கிய பிறகு ‘ஆன்-லைன்’ மூலம் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்ட தலைவர் கல்யாணம் தலைமை தாங்கினார். செயலாளர் மருத முத்து முன்னிலை வகித்தார்.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தான் தபால் துறையின் முதுகெலும்பு என கூறிக்கொண்டு இலக்கு நிர்ணயம் செய்யும் அதிகாரிகள் பரிவர்த்தனை கருவிகளின் (டிவைஸ்) தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கருவிகளில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி கோட்ட உதவி செயல் தலைவர் பரமசிவம், பொருளாளர் சிவஸ்ரீதரன், மகளிர் அணி நிர்வாகிகள் கலைவாணி, கண்மணி ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story