ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியது ஆச்சரியம் அளிக்கிறது - சித்தராமையா பேட்டி


ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியது ஆச்சரியம் அளிக்கிறது - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 3 May 2019 5:06 AM IST (Updated: 3 May 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. மைசூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயசங்கர் போட்டியில் உள்ளார்.

பெங்களூரு,

மைசூரு தொகுதியில் சித்தராமையாவுக்கும், மந்திரி ஜி.டி.தேவேகவுடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா நேற்று முன்தினம், மைசூரு தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர் என்று கூறினார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்ககையில் கூறியதாவது:-

உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா, மைசூரு தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பா.ஜனதாவுக்கு வாக்களித்து இருப்பதாக கூறி இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவரது இந்த கருத்து தவறானது என்று நான் கருதுகிறேன்.

வருகிற 23-ந் தேதி தேர்தல் முடிவு வெளியாகும்போது உண்மை என்ன என்பது தெரியவரும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

1 More update

Next Story