பாலக்கோடு பஸ் நிலையத்தில் மான்கறி விற்பனை செய்த 2 பேர் கைது


பாலக்கோடு பஸ் நிலையத்தில் மான்கறி விற்பனை செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2019 3:45 AM IST (Updated: 4 May 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு பஸ் நிலையத்தில் மான் கறி விற்பனை செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் மான் கறி விற்பதாக தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் பஸ் நிலையத்தில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது 2 பேர் ஒரு பையை வைத்துக்கொண்டு சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களை பிடித்து பையை சோதனை செய்தனர்.

அதில் 6 கிலோ மான்கறி பிளாஸ்டிக் பைகளில் வைத்து இருந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை அருகே உள்ள மேல்செங்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது50), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலை பகுதியை சோந்த கார்த்திகேயன் (30) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் தீர்த்தமலை காப்புக்காட்டில் வேறு ஒருவரிடம் இருந்து மான் கறி வாங்கி வந்து பாலக்கோடு பஸ் நிலையத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரும் விற்பனைக்கு வைத்திருந்த மான் கறியை பறிமுதல் வனச்சரகர் செல்வம், மான் கறி விற்ற 2 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மானை வேட்டையாடி மர்ம நபர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
1 More update

Next Story