கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் கையடக்க மின்னணு கருவியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் பாதுஷா, பொருளாளர் ரங்கநாதன், ஆலோசகர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கிராமிய அஞ்சல் ஊழியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள கையடக்க மின்னணு கருவியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தகவல் தொழில் நட்பத்தின் சேவையை அதிகப்படுத்த வேண்டும்.
சர்வர் பிரச்சினைகளை தீர்க்கும் வரையில், எழுத்து பூர்வமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு பணி மாறுதல் வழங்கி, ஆன்லைன் மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் பணி செய்தவர்களுக்கு உண்டான ஊதியத்தினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story