பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 May 2019 10:00 PM GMT (Updated: 3 May 2019 7:22 PM GMT)

பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

குமாரபாளையம்,

பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணாநகர், காடச்சநல்லூர், குச்சிப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தோக்கவாடி, தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், மொளசி, காட்டு வேலாம்பாளையம் மற்றும் வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக சங்ககிரி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

இதேபோல் சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. அப்போது குமாரபாளையம் துணை மின்நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபாளையம் நகரம், கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சின்னப்பநாய்க்கன்பாளையம், தட்டாங்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட வெப்படை துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.

இதனால் வெப்படை, பாதரை, பாதரை-இந்திரா நகர், ரங்கனூர்நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான் காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், பூதமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன்கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைகாடு, சின்னாகவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம் மற்றும் எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

Next Story