திருவேற்காடு அருகே கார் மோதி முதியவர் பலி


திருவேற்காடு அருகே கார் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 4 May 2019 3:15 AM IST (Updated: 4 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருவேற்காடு அருகே சென்னீர்குப்பம்- ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த காடுவெட்டி, வீராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 65). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், அதே பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு முத்துகிருஷ்ணன், தனது சைக்கிளில் திருவேற்காடு அருகே சென்னீர்குப்பம்- ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணனை அக்கம், பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் போரூர், சக்தி நகரைச்சேர்ந்தவர் ரமேஷ் (53). சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

போரூர் மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ரமேஷ், பரிதாபமாக இறந்தார்.

இந்த 2 விபத்துகள் குறித்தும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story