மேலதட்டப்பாறை பகுதியில் வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா பிரசாரம்
மேலதட்டப்பாறை பகுதியில் வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா பிரசாரம் செய்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று காலையில் தனது பிரசாரத்தை கே.பி.தளவாய்புரத்தில் தொடங்கினார். அவர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் உமரிக்கோட்டை, மேல தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
மேலதட்டப்பாறை கிராமத்தில் திரளான பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் சண்முகையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயன்பெறும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நான் செல்லும் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. ஆட்சி மாற்றம் விரைவில் வர உள்ளது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தரமான சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வசதி செய்து தரப்படும். விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். ஓட்டப்பிடாரத்தில் போக்குவரத்து பணிமனை அமைத்து அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தின் போது திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தியாகராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் வேட்பாளர் சண்முகையா கோரம்பள்ளம், அய்யனடைப்பு, வடக்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story