கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவிக்கு போட்டியா? ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. பதில்
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவிக்கு போட்டியா? என்பது குறித்து ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் எடியூரப்பா இருந்து வருகிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மாநில தலைவர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதையடுத்து, மாநில தலைவர் பதவிக்கு அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதுபோல, ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வும் மாநில தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாகவும், அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து பல்லாரியில் நேற்று ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மாநில தலைவர் பதவிக்கு அசோக், சி.டி.ரவி உள்ளிட்டோர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சியில் சாதாரண தொண்டனாகவும், ஒரு எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறேன். மாநில தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை.
பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது. பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்போம். அதனால் மாநில தலைவராக கட்சி மேலிடம் யாரை நியமித்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க போவதில்லை. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கவில்லை. அதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி கல் எறிந்து கொள்கின்றனர். அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதி.
காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.வாக ரமேஷ் ஜார்கிகோளி இருக்கிறார். அவர் தன்னுடன் மேலும் பல அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறி வருகிறார். அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் கர்நாடகத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படும். தற்போதுள்ள மந்திரிகள், முன்னாள் மந்திரிகளாக ஆகிவிடுவார்கள். இவ்வாறு ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story