ராமநகர் அருகே 7 தலை பாம்பு தோலை வழிபட்ட கிராம மக்கள்
இந்த கிராமத்தில் உள்ள காலி நிலத்தில் பாம்பு தோல் ஒன்று கிடந்தது. அது 7 தலைகள் கொண்டது போல் இருந்தது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநகர்,
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கொடிஹள்ளி அருகே மரிகவுடனதொட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காலி நிலத்தில் பாம்பு தோல் ஒன்று கிடந்தது. அது 7 தலைகள் கொண்டது போல் இருந்தது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த பாம்பு தோல் மீது மலர்கள் தூவியும், மஞ்சள், குங்குமம் இட்டும் பூஜை செய்து வழிபட்டனர். சிலர் 7 தலை கொண்ட பாம்புகள் இல்லை எனவும் கூறினர். ஆனாலும், இந்த தகவல் வேகமாக பரவியது.
இதனால், பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் அங்கு வந்து பாம்பு தோலை பார்த்து சென்றனர். சிலர் அந்த இடத்தில் நாகதேவதை கோவில் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஏராளமானவர்கள் தங்களின் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சென்றனர். இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story