மாவட்ட செய்திகள்

செய்யூர் அருகே நர்சு தீக்குளித்து தற்கொலை + "||" + Nurse fire bathed suicide

செய்யூர் அருகே நர்சு தீக்குளித்து தற்கொலை

செய்யூர் அருகே நர்சு தீக்குளித்து தற்கொலை
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வயலூருக்கு வந்தார்.
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த வயலூரை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 21). சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வயலூருக்கு வந்தார். அப்போது அவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தாங்கமுடியாமல் புவனேஸ்வரி கடந்த 29-ந்தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.


அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூனாம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான நர்சு, நகைக்காக கடத்திக் கொல்லப்பட்டது அம்பலம் தம்பி உள்பட 2 பேர் கைது
துறையூர் அருகே, 10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான நர்சு, நகைக்காக கடத்திக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக நர்சின் தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சென்னை போரூர் அருகே சோகம் பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
போரூர் அருகே, பெண் தீக்குளித்து இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகி பலியானார்.
3. ஆடியோவில் பரபரப்பு பேச்சு: 3 குழந்தைகளை விற்ற நர்சு, கணவருடன் அதிரடி கைது லட்சக்கணக்கில் பேரம் பேசியது அம்பலம்
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பான வாட்ஸ்-அப் ஆடியோ வெளியானதை தொடர்ந்து நர்சு மற்றும் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் லட்சக்கணக்கில் பேரம் பேசி குழந்தைகளை விற்றது தெரியவந்தது.
4. கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி தீக்குளித்து தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.