அ.தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன ஜி.கே.வாசன் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 4 May 2019 11:00 PM GMT (Updated: 4 May 2019 9:05 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கான திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன என அரவக்குறிச்சி பிரசாரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு வாக்கு கேட்டு, க.பரமத்தி, சின்னதாராபுரம், அரவக் குறிச்சி, ஈசநத்தம் ஆகிய பகுதிகளில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதா வது:-

நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும், வருகிற 19-ந்தேதி நடை பெறவுள்ள 4 தொகுதி இடைத் தேர்தல் களிலும் அ.தி.மு.க. வின் வெற்றி என்பது உறுதி செய்யப் பட்ட ஒன்று. தி.மு.க. வின் வாக்குறுதி களை மக்கள் நம்ப தயாராக இல்லை. தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ஆனால் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி கள் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு வரு கின்றன. முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் சாமானியர் களாக இருந்து இத்தகைய உயர்பதவிக்கு வந்தவர்கள். எனவே மக்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து வைத்து கொண்டு அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டங்களை செயல்படுத்து கின்றனர். அதிலும் மத்திய அரசிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்பில் திட்டங்களை கேட்டு பெற்றிருக்கின்றனர். விவசாயி கள் காப்பீடு திட்டம், இலவச கழிப்பறைகள், மண்வள பரிசோதனை திட்டம், வீடு வழங்கும் திட்டம், ஏழை மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் வழங்குவது, ரெயில் சேவை, தரமான நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பெண்களுக்கான திட்டங்கள்

ஏழை மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் வறுமையை ஒழிக்கும் நோக்கில் அ.தி.மு.க. ஆட்சி யில் அறிமுகம் செய்யப் பட்டது. இதனால் 80 லட்சம் குடும்பத்தினர் பயனடை கின்றனர். பெண் களின் முன் னேற்றம் நாட்டின் முன் னேற்றம் என்பதை உணர்ந்து கொண்டு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத் தில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிகப்படியான திட்டங்கள் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு இருக் கின்றன.

முருங்கை பவுடர் தொழிற்சாலை

அரவக்குறிச்சியில் உற்பத்தி அதிகமாகும்போது முருங்கை விவசாயிகள் சில சிரமங்களை சந்திக்கின்றனர். இந்தநிலை மாற முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர்திட்டம் செயல்படுத்துவது, ஏழை- எளியோருக்கு தொடர்ந்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது, அரசு கல்லூரி ஏற்படுத்துவது ஆகியவற்றுக் காக அ.தி.மு.க.வின் விசு வாசியான வி.வி.செந்தில் நாதனுக்கு ஆதரவு தாருங் கள். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குசேகரிப்பின்போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story