மாவட்ட செய்திகள்

அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் இன்று பிரசாரம் + "||" + The first minister of the Aravida Kachi today is a campaign

அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் இன்று பிரசாரம்

அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் இன்று பிரசாரம்
அரவக்குறிச்சியில் இன்று முதல்-அமைச்சர், பிரசாரம் செய்கிறார்.
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.வி.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து புறப்பட்டு காரில் கரூர் மாவட்டத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகை தர இருக்கிறார். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், அ.தி.மு.க.வினர் கரூர் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்க இருக்கின்றனர்.


திறந்த வேனில்...

பின்னர் இன்று மாலை 5 மணியளவில் வேலாயுதம்பாளையம் நான்குரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து தளவாபாளையம் கடைவீதி, க.பரமத்தி பஸ் நிறுத்தம், தென்னிலை நான்குரோடு, சின்னதாராபுரம் பஸ் நிலையம், எல்லமேடு பிரிவு ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசுகிறார். இதையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.