குடியாத்தம் அருகே பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை


குடியாத்தம் அருகே பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2019 3:45 AM IST (Updated: 5 May 2019 7:48 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் மோட்டூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் ஜீவிதா (வயது 17). குடியாத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த தயாளன் மகன் மெய்யழகன் (18) என்பவர் ஜீவிதாவை அடிக்கடி பின் தொடர்ந்து செல்வதும், அவரது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று ‘ஹாரன்’ அடித்தும் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் இதே போல் மெய்யழகன் நடந்துள்ளார். இதுகுறித்து ஜீவிதாவின் தாயார் கோமதி, மெய்யழகனிடம் கேட்டுள்ளார். அப்போது அதற்கு நான் அப்படிதான் செய்வேன் என்றும், உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என கேட்டும் மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து கோமதியும், அவரது கணவர் அசோக்குமாரும் மெய்யழகன் வீட்டிற்கு சென்று இதுதொடாடர்பாக கேட்டுள்ளனர். அப்போது மெய்யழகன், அவர்களை ஆபாசமாக பேசி, அசோக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து அறிந்த ஜீவிதா மனமுடைந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பரவி உடல் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வலி தாங்காமல் அலறினார். அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோமதி கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story