பர்கூர் அருகே டாஸ்மாக் கடையில் பீர் அதிக விலைக்கு விற்பனை மது பிரியர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம்


பர்கூர் அருகே டாஸ்மாக் கடையில் பீர் அதிக விலைக்கு விற்பனை மது பிரியர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 May 2019 3:45 AM IST (Updated: 5 May 2019 9:48 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே டாஸ்மாக் கடையில் பீர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மது பிரியர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பர்கூர்,

கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடாக உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் பீர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரையில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக மது பிரியர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். வழக்கமாக பீர் பாட்டிலின் அதிகபட்ச விலை ரூ.140 ஆகும். ஆனால் பர்கூர் சுற்று வட்டாரத்தில் பீர் பாட்டிலின் மீது ரூ.10 முதல் ரூ.20 அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) உள்ள கூலிங் பீர் மீது ரூ.20 வரையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காரகுப்பம் மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் பலரும், பீர் உள்ளிட்ட மதுபாட்டில்களின் மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கடையின் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில், மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து வகையான மது பாட்டில்கள் மீதும் ரூ.10 முதல் ரூ.20 கூடுதலாக வசூலிக்கிறார்கள். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கடைகளின் மீதும், பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
1 More update

Next Story