ரெயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு பிரதமருக்கு சித்தராமையா கோரிக்கை


ரெயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு பிரதமருக்கு சித்தராமையா கோரிக்கை
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு பிரதமருக்கு சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு,

ஹம்பி எக்ஸ்பிரஸ் 7½ மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால், சுமார் 600 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வை எழுத முடியவில்லை. இதற்காக மத்திய அரசுக்கு, சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பிறரின் சாதனைகளை தான் செய்தது போல் மோடி பேசுகிறார். உங்களின் மந்திரிசபையில் உள்ள திறமையற்றவர்களின் பொறுப்பை நீங்கள் ஏற்பீர்களா?. கர்நாடகத்தில் ரெயில் தாமதத்தால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியவில்லை.

அந்த மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பை பிரதமர் ஏற்படுத்தி தர வேண்டும். ரெயில்வே மந்திரி சரியான முறையில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு நாங்கள் வந்து நிலைமையை சரிசெய்து கொள்கிறோம். இவ்வாறு சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே தென்மேற்கு ரெயில்வே சார்பில் மத்திய மனிதவளத்துறைக்கு கடிதம் எழுதப்படும் என்றும், அந்த கடிதத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு நடத்த வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story