பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தவில்லை சஞ்சய் ராவத் விளக்கம்


பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தவில்லை சஞ்சய் ராவத் விளக்கம்
x
தினத்தந்தி 6 May 2019 3:18 AM IST (Updated: 6 May 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

பர்தாவுக்கு தடை விதிக்கவேண்டும் என சிவசேனா வலியுறுத்தவில்லை என சஞ்சய் ராவத் விளக்கம் அளித்து உள்ளார்.

மும்பை,

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து அங்கு பெண்கள் முகத்தை மறைத்தவாறு பர்தா அணிந்து செல்ல இலங்கை அரசு தடை விதித்தது. இந்தநிலையில் இலங்கையை போல இந்தியாவிலும் பெண்கள் பொதுஇடங்களில் முகத்தை மறைத்தவாறு பர்தா அணிந்து செல்ல தடை விதிக்கவேண்டும் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் செய்தி வெளியானது.

இதை கண்டித்து முஸ்லிம் பெண்கள் மும்ராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் பர்தா தடை விவகாரத்தில் சஞ்சய் ராவத் விளக்கம் அளித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘பெண்கள் முகத்தை மறைத்தவாறு பர்தா அணிந்து செல்ல தடை விதிக்கவேண்டும் என சிவசேனாவோ, உத்தவ் தாக்கரேவோ வலியுறுத்தவில்லை.

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து சாம்னாவில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் தான் பர்தா தடை குறித்து கூறப்பட்டுள்ளது’’ என்றார்.

Next Story