பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ.10 கோடி முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
ஒடிசாவின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. மேலும் 29 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.
மும்பை,
ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பானி என பெயரிடப்பட்ட அதிதீவிர புயல் கரையை கடந்தது. இந்த புயலின் கோர தாண்டவத்தால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. மேலும் 29 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த புயலின் தாக்கத்தால் ஒடிசாவில் உள்ள 10 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 52 நகர் பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின.இந்த நிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மக்களுக்கு மராட்டியம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள மராட்டியம் சார்பில் ரூ. 10 கோடி நிவாரணமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story