பல்லடம் அருகே நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் மோதல் 4 பேர் கைது


பல்லடம் அருகே நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் மோதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே இடப்பிரச்சினையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொங்கலூர்,

பல்லடம் அருகே அனுப்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவரது மகன்கள் பழனிசாமி(45), மருதாசலம்(35). வேலுச்சாமிக்கு சொந்தமாக 8 ஏக்கர் 40 சென்ட் விவசாய பூமி உள்ளது.

இந்த நிலத்தை வேலுச்சாமி கோவையை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு ரூ.67 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை நிலத்தை குடிபோதையில் இருந்தபோது தங்களது தந்தையை ஏமாற்றி கையெழுத்து வாங்கியதாக கூறி மகன்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் முறையாக இருப்பதாக கூறி நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

ஆனாலும் வேலுச்சாமியின் மகன்கள் பூமியை காலி செய்து கொடுக்காமல் அங்கேயே தங்கிருந்தனர். இந்தநிலையில் அனுப்பட்டிக்கு வந்த மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கும், வேலுச்சாமியின் குடுபத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த கை கலப்பு அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. இதில் இரண்டு தரப்பினருக்கும் இடையே காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாணிக்கத்தின் மாமியார் கோவை, காளப்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி(55), சின்ன மாமியா£ர் கமலாத்தாள்(50) மற்றும் வேலுச்சாமியின் மகன் மருத்தாசலம்(35), பழனிசாமியின் மனைவி செண்பகம்(34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.


Next Story