ஹாங்காங்கில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.9 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.22½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மலேசியா கடத்த முயன்ற ரூ.9 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது உடைமைகளில் கேமராக்கள், லென்ஸ் மற்றும் கேமரா உதிரி பாகங்கள் இருந்தன. மேலும் இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து தங்கக்கட்டிகளையும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உதிரிபாகங்களையும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல கர்நாடகாவை சேர்ந்த முகமது (47) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசில் வெளிநாட்டு பணமான சவுதி அரேபிய ரியால் மற்றும் மலேசிய ரிங்கிட் ஆகியவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து முகமதுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது சென்னைக்கு ஹாங்காங்கில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் சென்னையை சேர்ந்த அசாருதீன் (வயது 35), கவுதம் (32), ரியாஸ்கான் (35) ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவர் களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது உடைமைகளில் கேமராக்கள், லென்ஸ் மற்றும் கேமரா உதிரி பாகங்கள் இருந்தன. மேலும் இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து தங்கக்கட்டிகளையும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உதிரிபாகங்களையும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல கர்நாடகாவை சேர்ந்த முகமது (47) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசில் வெளிநாட்டு பணமான சவுதி அரேபிய ரியால் மற்றும் மலேசிய ரிங்கிட் ஆகியவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து முகமதுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story