ஜோலார்பேட்டை அருகே காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததால் பணிகள் தீவிரம்


ஜோலார்பேட்டை அருகே காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததால் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 May 2019 5:12 PM GMT (Updated: 2019-05-06T22:42:42+05:30)

ஜோலார்பேட்டை அருகே காவிரி குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் எதிரொலியாக அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,


ஜோலார்பேட்டை அருகே சின்னமண்டலவாடி கிராமத் தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக சரிவர குடிநீர் வினியோகிக்கப் படவில்லை. அதே பகுதியில் சில கிலோ மீட்டர் தொலை வில் உள்ள ஊர்கள் காவிரி குடிநீர் திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தங்கள் கிராமத்தையும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால் அந்த மதிப்பீடு கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து வினியோகிக் கப்படும் தண்ணீரும் கடந்த பல மாதங்களாக வரவில்லை. அதனை சரி செய்யவும் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னமண்டலவாடி கிராம பொதுமக்கள் நேற்று பொன்னேரி-குன்னத்தூர் சாலையில் காலிக்குடங்களு டன் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுபட் டனர்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கருணாநிதி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க உள்ளோம் என்று கூறி டேங்கருடன் கூடிய டிராக்டரை வரவழைத்தனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இந்த தண்ணீர் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு காவிரி குடிநீர்தான் வேண்டும் எனவே எங்கள் கிராமத்தை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்க உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என்றனர். இதனையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி னர்.

அவர்களது உத்தரவின் பேரில் ஏற்கனவே தயாரிக்கப் பட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை யடுத்து சின்ன மண்டலவாடி கிராமத்தை காவிரி குடிநீர் திட்டத்தில் சேர்ப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் அதற்கான முதல் கட்ட பணிகளையும் தொடங் கினர். இதனையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story