23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்பட்டவர் இலங்கையில் இருக்கிறார் மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை


23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்பட்டவர் இலங்கையில் இருக்கிறார் மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 6 May 2019 11:15 PM GMT (Updated: 6 May 2019 7:15 PM GMT)

23 ஆண்டுகளுக்கு முன்னர் மீன்பிடிக்க சென்று விபத்தில் இறந்ததாக கருதப்பட்டவர் தற்போது இலங்கையில் இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவரை மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பரதன்(வயது 62). இவர் கடந்த 1996–ம் ஆண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கருதி அவர் தொலைந்துபோன நாளை இறந்த நாளாக கருதி காரியங்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளம் ஒன்றில் பிச்சைக்காரர்கள் பற்றி வெளியான வீடியோ காட்சியில் பரதன் இலங்கையில் பிச்சைக்காரராக திரிவது போன்ற காட்சியை பரதனின் குடும்பத்தினர் கண்டனர். அதில் உள்ளது பரதன் தான் என்பதை அவரின் மகள் சரவண சுந்தரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உறுதி செய்தனர். இதுதொடர்பான செய்தி கடந்த மே1–ந்தேதி தினத்தந்தியில் பிரசுரமானது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இறந்ததாக கருதப்பட்டவர் இலங்கையில் மனநிலை சரியில்லாதது போன்று பிச்சைக்காரர்களுடன் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.

இதனை தொடர்ந்து பரதனின் மனைவி சரஸ்வதி(60). மகள்கள் சரவணசுந்தரி, முத்துலெட்சுமி, தம்பி மாரிமுத்து உள்ளிட்ட குடும்பத்தினர் கடல்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கரு ணாமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக கருதப்பட்டு தற்போது இலங்கையில் பிச்சை எடுத்துவரும் பரதனை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று கோரி கண்ணீர் மல்க மனு அளித்தனர்.


Next Story