தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிமம் ரத்து அதிகாரிகள் எச்சரிக்கை
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் முகவூர் சாலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து செட்டியார்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் அழகர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இங்குள்ள ஓட்டல், பேக்கரி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினார் உரிமம் ரத்து செய்யப்படும், கடை மற்றும் நிறுவனம் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story