மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது + "||" + Pollachi Government hospital Kidnapped the child The girl was arrested

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது
குழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதால் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றார்.
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்த தேவி (வயது 30) கடந்த மாதம் 29-ந் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவருக்கு சில நாட்களாக உதவி செய்தார்.


குழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதால் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த தேவி, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து குழந்தையை கடத்தியது உடுமலை பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (36) என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று பெண் மீது விழுந்ததில் காயமடைந்தார்.
2. பொள்ளாச்சி பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் அச்சம்
பொள்ளாச்சி பகுதியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
3. கோவை மாவட்ட மக்களின் கனவு கானல் நீரானது பொள்ளாச்சி,கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை ரெயில்வே மந்திரி அறிவிப்பு
பொள்ளாச்சி,கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட மக்களின் கனவு கானல் நீரானது.
4. உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்.
5. எழிலும் பொழிலும் இணைந்த பொள்ளாச்சி
நாம் பார்த்து ரசித்த பல திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் ஊர் பொள்ளாச்சி. கோவைக்கு தெற்கே அமைந்துள்ள இந்த ஊர் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே உள்ளது.