கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான, வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்-உதவியாளர்களுக்கு பயிற்சி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோணம் பாலிடெக்னிக் கல்லூரிக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.
அப்போது வருகிற 23-ந் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை பணியை மேற்கொள்ளும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 128 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் பணியை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்த்தியான முறையில் செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் விதம் மற்றும் ஒவ்வொரு பணியாளரும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் (நாகர்ே-்காவில்) விஷ்ணு சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளா் (பொது) சுகன்யா, கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) குழந்தைசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story