மசினகுடி பகுதியில் கந்து வட்டி வசூலித்த போலீஸ்காரரின் மனைவி உள்பட 2 பேர் கைது


மசினகுடி பகுதியில் கந்து வட்டி வசூலித்த போலீஸ்காரரின் மனைவி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி பகுதியில் கந்து வட்டி வசூலித்த போலீஸ்காரரின் மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மசினகுடி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 4–ந் தேதி ஊட்டி தனி தாசில்தார் மகேஷ்வரி தலைமையிலான பறக்கும் படையினர் கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசினகுடியில் இருந்து கூடலூரை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்தஅவர் வைத்திருந்து பையில் அசல் ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டுகள், ஏ.டி.எம். கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் என 30 அட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அட்டைகள் அனைத்தும் மசினகுடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உடையது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 26) என்பவரை பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால், பறக்கும் படை அதிகாரிகள் பறமுதல் செய்யப்பட்ட ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கூடலூரில் உள்ள புஸ்மகிரியை சேர்ந்த மகாலிங்கம் மனைவி சாரதா (வயது 36) என்பவர் கந்து வட்டி பணம் கொடுத்து வருவதாகவும், இற்கான வட்டி பணத்தை தினேஷ்குமார் வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.

கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும்போது, பணம் பெறுபவர்களிடம் இருந்து ஆதார் அட்டை, ரே‌ஷன்கார்டு, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட அசல் அட்டைகளை சாரதா வாங்கியுள்ளார். மேலும் முறையாக பதிவு செய்யாமல் விதிகளை மீறி வட்டி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் கந்து வட்டி வசூலித்ததாக சாரதா மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை மசினகுடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கூடலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கந்து வட்டி வழக்கில் சிறையில் அடைக்கபட்டுள்ள சாரதாவின் கணவர் மகாலிங்கம் நீலகிரி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story