வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது - கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்


வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது - கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 May 2019 11:00 PM GMT (Updated: 7 May 2019 5:34 PM GMT)

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது என கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை,

கால்நடைகளை கோடை காலங்களில் குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து சரியான பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாக்கலாம். அந்த வகையில் கால்நடைகளை கடும் வெப்பம் நிலவும் பகல் நேரத்தில் மர நிழலிலோ அல்லது காற்றோட்டமான நிழலுடன் கூடிய திறந்த வெளியில் கட்டி வைக்க வேண்டும்.

கால்நடைகளின் மீது தண்ணீர் தெளித்து கழுவுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. குறிப்பாக அதிகாலையில் மேய்ச்சலுக்கு அனுப்பி கடும் வெயில் ஆரம்பிக்கும் முன் திருப்பி அழைத்து வந்து விட வேண்டும்.

மேலும் பசுந்தீவனம் அதிகமாக அளிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம். மாடுகளுக்கு கருவூட்டல் செய்யும் போது வெப்பம் தாழ்ந்த நேரத்தில் செய்தல் வேண்டும். செயற்கை கருவூட்டல் செய்த பிறகு மாடுகளை சிறிது நேரம் நிழலில் கட்டி வைத்து விட்டு, பிறகு ஓட்டுதல் வேண்டும். மேற்கூறிய பராமரிப்பு முறைகளை பின்பற்றி கோடை காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story