மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மனைவியின் தங்கை கற்பழிப்பு
மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கட்டிட காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவரது மனைவியின் தங்கை அவரது வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது, அங்கு வைத்து அவர் மனைவியின் தங்கையை கற்பழித்து உள்ளார்.
பின்னர் சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் யாரிடமும் கூறவில்லை.
இந்தநிலையில், அந்த ஆண்டு மே மாதம் திடீரென இளம்பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
10 ஆண்டு ஜெயில்
அப்போது தான் அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்டதை அவர் கூறினார். இது தொடர்பாக குடும்பத்தினர் இளம்பெண்ணின் அக்காள் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, அந்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story