மசாஜ் சென்டர் என்ற பெயரில், வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கேரள வாலிபர் கைது - 4 இளம்பெண்கள் மீட்பு


மசாஜ் சென்டர் என்ற பெயரில், வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கேரள வாலிபர் கைது - 4 இளம்பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 8 May 2019 3:45 AM IST (Updated: 8 May 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீடு வாடகைக்கு எடுத்து ‘கேரளா மசாஜ்’ என்ற பெயரில் விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.

வேலூர்,

வேலூர் கொசப்பேட்டை நல்லான்பட்டறை தெருவில், வாலிபர் ஒருவர் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையில் போலீசார், மசாஜ் சென்டருக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அங்கு 4 இளம்பெண்கள் இருந்தனர். அதைத்தொடர்ந்து அங்கு நடத்திய விசாரணையில் வீடு வாடகைக்கு எடுத்து கேரள மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது. கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ஷபீக் (வயது 28) என்பவர் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்துள்ளார்.

அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளா, மும்பை பகுதிகளை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டு, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

குடியிருப்பு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story