வானவில் : துணிகளின் கரையை நீக்கும் ‘எக்ஸ் ஸ்பெக்ட்’


வானவில் : துணிகளின் கரையை நீக்கும் ‘எக்ஸ் ஸ்பெக்ட்’
x
தினத்தந்தி 8 May 2019 4:10 PM IST (Updated: 8 May 2019 4:16 PM IST)
t-max-icont-min-icon

துணிகளில் படியும் கறைகளை நீக்குவது சவாலான வேலைகளில் ஒன்று.

மார்க்கெட்டுகளில் உயர்தர கெமிக்கல்கள் துணியை வீணாக்கக்கூடும். இருக்கவே இருக்கிறது தொழில்நுட்பம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக போஷ்ச் ( BOSCH ) நிறுவனம் கையடக்கமான ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. பார்ப்பதற்கு ரிமோட் போன்றிருக்கும் இது எக்ஸ் ஸ்பெக்ட் ( X SPECT ) என்று பெயரிடப்பட்டுள்ளது. மிகக் கடினமான கறைகளை கூட இதனை கொண்டு நீக்கி விடலாம். வீட்டிலிருக்கும் வாஷிங் மெஷினுடன் இணைந்து செயல்படுகிறது.கரையின் அருகே இந்த கருவியை வைத்தால் அது எந்த வகையான துணி, எவ்வளவு டிடர்ஜெண்ட் தேவைப்படும், எந்த வெப்பநிலையில் துவைக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களை சென்சார் மூலம் அறிந்து கொண்டு விடும். அவற்றை வாஷிங் மெஷினுக்கு மெசேஜாக அனுப்பி விடும். கூடிய விரைவில் வெளியாக இருக்கும் இந்த கருவி பிரிட்ஜில் இருக்கும் பொருட்கள் எப்போது வைக்கப்பட்டன மற்றும் மைக்ரோவேவ் ஓவனில் உணவு சரியாக சமைக்கப்படுகிறதா போன்ற தகவல்களையும் ஆராய்ந்து சொல்லும்.

Next Story