திருக்கடையூரில், லாரி மோதி முதியவர் பலி - டிரைவருக்கு வலைவீச்சு


திருக்கடையூரில், லாரி மோதி முதியவர் பலி - டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 May 2019 4:30 AM IST (Updated: 8 May 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் லாரி மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூர் அபிஷேகக்கட்டளை காலனித்தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 63). இவர், நேற்று காலை டீ குடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து திருக்கடையூர் கடைத்தெருவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது தரங்கம்பாடி நோக்கி ஜல்லி லோடு ஏற்றி சென்ற ஒரு லாரி திடீரென தனபால் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story