தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 87.50 சதவீத தேர்ச்சி


தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 87.50 சதவீத தேர்ச்சி
x
தினத்தந்தி 9 May 2019 3:45 AM IST (Updated: 9 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளில் 87.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தர்மபுரி,

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 101 அரசு பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 766 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 295 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.50 ஆகும். கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளில் 87.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பிளஸ்-1 தேர்ச்சி சதவீதம் 0.18 சதவீதம் அதிகரித்து உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகரித்து உள்ளது.

அரசுபள்ளி மாணவ-மாணவிகளின் பிளஸ்-1 தேர்ச்சி சதவீத அடிப்படையில் இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டம் மாநில அளவில் 28-வது இடத்தை பிடித்து உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் பள்ளிகள் வாரியாக அரசு பள்ளிகள் 87.50 சதவீத தேர்ச்சியையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 91.67 சதவீத தேர்ச்சியையும், பழங்குடியினர் பள்ளிகள் 84.85 சதவீத தேர்ச்சியையும் பெற்று உள்ளன.

அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.05 சதவீத தேர்ச்சியையும், சுயநிதி பள்ளிகள் 99.30 சதவீத தேர்ச்சியையும், மெட்ரிக் பள்ளிகள் 98.51 சதவீத தேர்ச்சியையும் பெற்று உள்ளன. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி 91.51 சதவீதமாகும்.
1 More update

Next Story