பிளஸ்-1 தேர்வில் மாவட்டம் முழுவதும் 85 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் இந்த ஆண்டு 85 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 198 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் 24 அரசு பள்ளிகள் உள்பட 85 பள்ளிகள் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன.
100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விவரம் வருமாறு:-
எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியூர் புதுவலவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, செவிந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைகுறிச்சிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கொல்லிமலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பில்லிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொக்கரையான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமாபுரம் மாதிரி பள்ளி, பொம்மம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.
Related Tags :
Next Story