சுரண்டை அருகே பரிதாபம் மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு


சுரண்டை அருகே பரிதாபம் மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 9 May 2019 3:00 AM IST (Updated: 9 May 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

சுரண்டை, 

சுரண்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் இசக்கி என்பவருடைய மகன் லட்சுமணன் (வயது 18).

அவரது பெற்றோர் கேரளாவில் வசித்து வருகின்றனர். லட்சுமணன் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனது தாத்தா மாடசாமி வீட்டில் தங்கி தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந் தார். நேற்று முன்தினம் மாலை லட்சுமணன் தனது நண்பர்களுடன் தென்காசி சென்று கொண்டிருந்தார். சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ரோட்டில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் லட்சுமணன் தலையில் படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story