நீலகிரி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு - விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்
நீலகிரி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவர். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
குன்னூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துனர், கடைசலர், குளிர்பதன கம்மியர், மோட்டார் வாகன கம்மியர், மின்னணுவியல் கம்மியர், தச்சர் மற்றும் பற்ற வைப்பவர் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் தொழில் பிரிவுக்கு அனைத்து பிரிவினரை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மோட்டார் வாகன கம்மியர், கம்பியாள், பற்ற வைப்பவர், குழாய் பொருத்துபவர் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினரின் விண்ணப்பங்கள் போக மீதமுள்ள காலியிடங்கள் இதர பிரிவினரை கொண்டு நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story