மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 May 2019 5:00 AM IST (Updated: 9 May 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாற்றுத்திறனாளி சிறுமி

மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த 17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென வாந்தி எடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து சிறுமியை அவளது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்தார். அங்கு அவளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது தாய் சைகை மூலம் அவளிடம் கேட்ட போது, அவளை பக்கத்து வீட்டை சேர்ந்த 25 வயது வாலிபர் கற்பழித்து இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

இதுபற்றி சிறுமியின் தாய் கோவண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளியான சிறுமியின் பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Next Story