ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து 3 நாட்கள் பிரசாரம் ஜான்பாண்டியன் தகவல்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வருகிற 14-ந் தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வருகிற 14-ந் தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
வாழ்த்து
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று காலை தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியனை, அவரது வீட்டில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
3 நாட்கள் பிரசாரம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து, வெற்றிக்கு உறுதுணையாக இருந்தோம்.
அதேபோன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து வருகிற 14, 15, 16 ஆகிய 3 நாட்களும், ஓட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி ஆகிய யூனியன்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன். அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மகராஜன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






